சுவிட்சர்லாந்தில் கோவிட் 19 நோய் தொற்றாளர் எண்ணிக்கை சிறிதளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய வாரங்களில் ஆய்வு கூட முடிவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் எட்டாம் திகதியில் முதல் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 484 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நோய் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிகக் குறைவாக காணப்படுகின்றது என சுவிட்சர்லாந்து மத்திய சுகாதார அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
புதிய நோய் தொற்று திரிபுகளின் காரணமாக இவ்வாறு நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வாரம் ஒன்றிற்கு சராசரியாக 250,000 கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு மற்றும் வடமேற்கு சுவிட்சர்லாந்து பகுதிகளில் தற்பொழுது கூடுதல் எண்ணிக்கையில் நோய் தொற்றாளர்கள் பதிவாகின்றனர் என மத்திய சுகாதார அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.