சுவிட்சர்லாந்தின் வாட் கன்டனில் குடியிருப்பு தொகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த தீ விபத்து சம்பவம் வாட் கான்டனின் வீவேய் வீடி நகரின் குடியிருப்பு தொகுதி ஒன்றில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த தீ விபத்து வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த தீ வைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
39 வயதான எகிப்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இந்த சம்பவத்தின் சூத்திரதாரி என்ற அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தீ விபத்து சம்பவத்தில் 75 வயதான சுவிட்சர்லாந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த தீ விபத்தில் வேறு எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்டபோது இந்த ஐந்து மாடிகளை கொண்ட குடியிருப்பு தொகுதியின் ஏனைய மாடிகளில் வசித்தவர்கள் வெளியேற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அதற்கான அவசியம் ஏற்படவில்லை என தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறு எனினும் தீ விபத்து சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வாட் கன்டன் பொலிசார் தெரிவிக்கின்றனர்.