சுவிட்சர்லாந்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பொது வாக்கெடுப்புகள் குறித்த பிரசாரங்கள், சிறுபான்மை சமூகத்தினரை அழுத்தங்களுக்கு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருமணம் போன்ற விவகாரங்கள் குறித்த பொது வாக்கெடுப்பு நேரடியாக சில சிறுபான்மை சமூகத்தினரை பாதிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் சூரிச் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பிலான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறான பொது வாக்கெடுப்பு குறித்த பிரசாரங்களின் போது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உடலில் இருந்து அதிக அளவு அழுத்தங்களை வெளிப்படுத்தக்கூடிய ஹார்மோன்கள் வெளியாவது கண்டறியப்பட்டுள்ளது.
மத, கலாச்சார அடிப்படையிலான சமூகக் கட்டமைப்பை கொண்ட சில தரப்பினர், சிலவகை பிரசாரங்களை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக காணப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானவர்கள் வாக்கெடுப்பு தொடர்பான பிரசாரங்களின் போது சிறுபான்மை சமூகத்தினர் பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.