சூடான் சமாதான மாநாடு சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சூடான் ராணுவத்திற்கும் கிளர்ச்சி படையினருக்கும் இடையில் பாரிய மோதல்கள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு பின்னணியில் எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியளவில் இரு தரப்பினருக்கும் இடையில் சமாதான பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மோதல்களுடன் தொடர்புடைய தரப்பினரை பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புமாறு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
சூடானில் இடம்பெற்று வரும் மோதல்களை தடுக்கும் நோக்கில் இந்த சமாதான மாநாடு நடத்தப்படுவதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் அந்தனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
சூடான் ராணுவப் படையினர் எஃப்.எஸ்.ஆர் என்ற கிளர்ச்சிப்படையினர் ஆகியோருக்கு அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக, சமாதான பேச்சு வார்த்தைகளில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த மாநாடு சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14-ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த மாநாடு தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதனையும் இதுவரையில் வெளியிடவில்லை.