நேபாளத்தில் இடம்பெற்ற விமான விபத்து சம்பவம் ஒன்றில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
19 பேர் பயணித்த விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படும் போதே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நேபாள்தின் தலைநகர் காட்மண்டுவின் சாயூரியா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விமானம் நேபாளத்தின் காட்மண்டுவில் இருந்து பொக்ராவிற்கு பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விமானம் புறப்பட்ட போது திடீரென தீப்பற்றிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.