நேபாளத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேபாளத்தின் தலைநகர் காட்மண்டுவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விமான விபத்தில் விமானத்தின் விமானி தவிர்ந்த ஏனைய அனைவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தில் காயமடைந்த விமானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சாயுர்யா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பரீட்சார்த்த அடிப்படையில் இந்த விமானம் பயணம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நேபாளத்தின் பிரபல சுற்றுலா நகரமான பொக்காரவிற்கு குறித்த விமானம் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலைய ஓடுபாதையில் இருந்து புறப்பட்டு சில நிமிடங்களில் விமானம் தீப்பற்றிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் ஓடுபாதையின் கிழக்கு திசையில் விழுந்து விபத்துக்குள்ளானது என தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தில் பயணித்த 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்த விமானி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் 17 பேர் நேபாள பிரஜைகள் எனவும் ஒருவர் யேமனிய பிரஜை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமான விபத்திற்கான சரியான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
1992 ஆம் ஆண்டுக்குப்பின்னர் நேபாளத்தில் இடம்பெற்ற மிக மோசமான விமான விபத்து இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
1992ம் ஆண்டு காட்மண்டு விமான நிலையத்தில் பாகிஸ்தான் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று விபத்துக்கு உள்ளானதில் 167 பேர் கொல்லப்பட்டனர்.