-0.2 C
Switzerland
Friday, January 24, 2025

இலங்கைக்கான சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

Must Read

VFS குளோபல் வீசா சர்ச்சை காரணமாக இலங்கை சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இலங்கை சுற்றுலா துறை பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபர தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் numbers.lk இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுற்றுலாத்துறை பங்குதாரர்கள், சுற்றுலாத்துறை அமைச்சு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மேற்கொண்ட கடும் முயற்சி காரணமாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டது.

2015 ஆம் ஆண்டின் பின்னர் பதிவான அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் நவம்பர் மாதம் பதிவாகி இருந்தது.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும் 2015 மற்றும் 2016ஆம் ஆண்டை விட கூடுதலான எண்ணிக்கை சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர்.

இந்த நிலைமை 2024 பெப்ரவரி மாதம் மற்றும் மார்ச் மாதங்களிலும் தொடர்ச்சியாக அதிகரிக்கும் போக்கினை பதிவு செய்திருந்தது.

மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களிலும் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் போக்கினை பதிவு செய்திருந்தது.

இவ்வாறான ஒரு பின்னணியில் கடந்த ஏப்ரல் மாத நடுப் பகுதியில் அரசாங்கம் சர்ச்சைக்குரிய பிஎப்எஸ் குளோபல் நிறுவனத்துடன் வீசா வழங்குதல் தொடர்பில் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டது.

இதன் பின்னர் ஏப்ரல் மே மற்றும் ஜூன் மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளது.

குறிப்பாக கடந்த ஏப்ரல் மாத சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டை விட குறைவடைந்துள்ளது.

மே மாத சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை 2016 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளை விட குறைவானது, எனவும் ஜூன் மாத சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டை விடவும் குறைவானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் ஒன்லைன் வீசா விண்ணப்ப ஆவண பரிசீலனை பணிகளை வீ.எப்.எஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீ.எப்.எஸ் நிறுவனம் கூடுதல் கட்டணம் அறவீடு செய்வதாகவும் இது பாரிய மோசடி எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES