உக்கிரேனில் இயங்கி வரும் சுவிட்சர்லாந்து தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஷ்ய படையினர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைனின் கார்க்கீவ் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் சுவிஸ் பிரஜைகள் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் கட்டிடம் மிக மோசமாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
FSD என்ற சுவிட்சர்லாந்து நிலக்கண்ணி வெடி அகழ்வு அமைப்பு என்ற நிறுவனமே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.