சுவிட்சர்லாந்தில் கலாநிதி பட்டம் பெற்றுக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குறிப்பாக சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு மொழி பேசப்படும் பகுதிகளில் காணப்படும் பல்கலைக்கழகங்களில் கலாநிதி பட்டம் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் 21,200 கலாநிதி பட்ட மாணவர்கள் கற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இயற்பியல், கணினி விஞ்ஞானம், பால்நிலை கல்வி, சட்டம், கலை, வரலாறு போன்ற பல்வேறு துறைகளில் இவ்வாறு மாணவர்கள் தங்களது கலாநிதி பட்டக் கற்கை நெறியை தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இது கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னரான எண்ணிக்கையுடன் ஒப்பீடு செய்யும் போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு மாணவர்கள் அதிகளவில் கலாநிதி அல்லது பீ.எச்.டி கற்கை நெறிகளை கற்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்கு சுவிட்சர்லாந்து பல்கலைக்கழக ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.