சுவிட்சர்லாந்தின் பிரபல மாடல் அழகி தாய்லாந்தின் பேங்கொக் நகரில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
24 வயதான குறித்த பெண்ணின் கணவர் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த சுவிஸ் பெண் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார் என தெரிவித்து பெண்ணின் கணவர் காயமடைந்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
எவ்வாறு எனினும் குறித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த ஸ்விஸ் தம்பதியினரின் வீடு அமைந்திருந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்களையும், சம்பவம் இடம்பெற்ற பகுதியையும் சோதனை இட்ட போது போலீசார் இந்த மரணம் ஓர் கொலையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பெண் ஒருவர் தாய்லாந்தில் கொல்லப்பட்டுள்ளதாக சுவிஸ் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும் மேலதிக விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை.