ஜெர்மனியின் பிராங்புருட் விமான நிலைய போராட்டத்தினால், சுவிஸ் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலநிலை மாற்றம் தொடர்பில் எதிர்ப்பை வெளியிட்டு விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் சுவிஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களின் பயணங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக ஜெனீவா மற்றும் சூரிச் நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ள காத்திருந்தவர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
போராட்டம் காரணமாக சுமார் 370 பேர் பாதிக்கப்பட்டதாகவும் சில விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் சுவிஸ் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக சுவிஸ் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிராங்க்புருட் விமான நிலையத்தின் விமான பயணங்கள் இன்றையதினம் காலை இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்திற்குள் காலநிலை செயற்பாட்டாளர்கள் பிரவேசித்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
லாஸ்ட் ஜெனரேஷன் என்ற அமைப்பினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு உலகின் வேறு சில விமான நிலையங்களிலும் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.