காசா போரை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹரிஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்த தற்போதைய ஜனாதிபதி ஜோப் பைடன் அண்மையில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்ததுடன், கமலா ஹரிஸை வேட்பாளராக முன்மொழிந்திருந்தார்.
அமெரிக்க அரசாங்கம் பொதுவாக இஸ்ரேல் ஆதரவு கொள்கைகளை வெளிப்படுத்தி வருகின்றது.
காசாவில் பதிவாகும் உயிர்ச்சேதங்கள் குறித்து தீவிர கரிசனை கொண்டு உள்ளதா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய அரசாங்கம் பயன்படுத்தும் தற்காப்பு வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நேரம் இது என அவர் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீன பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூவை நேருக்கு நேர் சந்தித்தபோது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு தீர்வு திட்டமே பொருத்தமானது என அவர் வழியுறுத்தியுள்ளார்.
அண்மைக்காலமாக காசா பிராந்தியம் மீது இஸ்ரேல் படையினர் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் அமைப்பு வாகனங்கள் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காசாவில் இதுவரையில் 39000 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காசாவில் இடம் இடம்பெற்று வரும் பாரிய மனித அழிவுகளை தொடர்ந்தும் வேடிக்கை பார்க்க முடியாது என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.