சுவிட்சர்லாந்து பிரான்ஸ் எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாக முன்னதாக மூன்று நாட்கள் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எல்லைப் பகுதியில் 900 நபர்களும், 500 வாகனங்களும் சோதனையிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சோதனைகளின் போது தடை செய்யப்பட்ட ஆயுதங்ங்கள் மற்றும் தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் – சுவிட்சர்லாந்து அதிகாரிகள் கூட்டாக இணைந்து இந்த சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த கூட்டு சோதனைகளின் போது ஆயுதங்கள் தவிர போதைப் பொருட்களும் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த சோதனையின் போது தேடப்பட்டு வந்த நபர் ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.