ஜெர்மன் நோக்கிப் புறப்பட்ட சுவிட்சர்லாந்து விமானமொன்று புறப்பட்டு சில நிமிடங்களில் மீளவும் தரையிறக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியின் பேர்ளின் நோக்கிப் புறப்பட்ட விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
பயணிகளை தாங்கிய விமானம் இன்று காலை 7.42 மணிக்கு புறப்பட்டதாகவும், புறப்பட்டு சில நிமிடங்களில் தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவசரமாக தரையிறக்கப்பட்ட காரணத்தினால் விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனங்கள் குவிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காலை 8.20 மணியளவில் பயணிகள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளனர்.
விமானத்தில் எண்ணெய் போன்றதொரு திரவத்தின் மனம் வீசியதாக விமானி தெரிவித்துள்ளார்.
இதனால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.