இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரிவு செய்யும், தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாய்க்க அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதேவேளை, பொலிஸ் மா அதிபர் பதவியில் நீடிக்க முடியாது என தேசபந்து தென்னக்கோனுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.