ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்காக சுயாதீன வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சீ பெரேரா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி வரையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.