சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் 66 வயதான நபர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
ஜெனீவாவில் அமைந்துள்ள அடுக்கு மாடி வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலை அவருடன் அறையில் தங்கியிருந்தவர் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த 66 வயதான நபர் மீது பல தடவைகள் கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 48 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் கைதான நபரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கத்தி குத்துக்கு இலக்கான நபரின் 21 வயது மகனும் அதே வீட்டில் தங்கியிருந்தார் எனவும் அவருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.