ஒலிம்பிக் போட்டித் தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் பிரான்சின் ரயில் வலையமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் ரயில் கட்டமைப்பை ஸ்தம்பிதம் அடையச் செய்யும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த ரயில் வலையமைப்பு மீதான தாக்குதல்களினால் சுமார் 8 லட்சம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த ரயில் வலையமைப்பு தாக்குதலை சீர் செய்வதற்கு இரண்டு நாட்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
சில ரயில் பயணங்கள் ரத்து செய்யப்படலாம் எனவும் சில ரயில் பயணங்கள் காலதாமதம் ஆகலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு இடங்களில் ரயில் உட்கட்டுமான வசதிகள் மீது தீ வைக்கப்பட்டுள்ளது.