பாரிசில் ஆரம்பமாகியுள்ள ஒலிம்பிக் போட்டி தொடருக்கான பாதுகாப்பு பணிகளில் சுவிட்சர்லாந்து பொலிஸார் இணைந்து கொண்டுள்ளனர்.
பொலிஸாரும், மோப்ப நாய்களும் இவ்வாறு பாதுகாப்பு பணியில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான விசேட நிபுணத்துவம் கொண்ட அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய்கள் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேர்ன், ஜெனீவா, ப்ரைபேர்க், நியூசெட்டால், வோட், சூக் மற்றும் சூரிச் போலீஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் ஆரம்பமான பாரிஸ் கோடைகால ஒலிம்பிக் போட்டி மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டி ஆகியன நடைபெற்ற முடியும் வரையில் சுவிஸ் பொலிஸார் சேவையை வழங்க ஆயத்த நிலையில் இருக்கின்றார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8ம் திகதி வரையில் சுவிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.