குரேஷியாவில் இடம் பெற்ற விபத்தில் சுவிஸ் பிரஜை பலி கொல்லப்பட்டுள்ளார்.
21 வயதான சுவிட்சர்லாந்து பிரஜையே இவ்வாறு கொள்ளப்பட்டுள்ளார்.
குரேஷியாவின் சுற்றுலா நகரமான Murter பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சைக்கிள் ஒன்றை ஓட்டிச் சென்றபோது கீழே விழுந்து குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தகவல்களை திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து குறித்த நபர் பள்ளத்தாக்கில் விழுந்ததன் காரணமாக விபத்து ஏற்பட்டதாகவும், சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.