இஸ்ரேலில் மைதானம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட ரொக்கட் தாக்குதலுக்கு சுவிட்சர்லாந்து கண்டனம் வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக இந்த தாக்குதலை கண்டித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் இந்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் காணப்படும் கோலன் ஹய்ட்ஸ் பகுதியில் நடத்தப்பட்ட ரொக்கட் தாக்குதலில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் சட்டவிரோதமானது என சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
மோதல்களுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் வன்முறையிலிருந்து விடுபட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, இந்த தாக்குதலை ஹிஸ்புல்லாஹ் இயக்கம் மேற்கொண்டதாக இஸ்ரேல் அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.