சுவிட்சர்லாந்தின் வலாயிஸ் கான்டனின் விட்ரோஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
55 வயதான நபர் ஒருவர் அதே வயதான ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.
பின்னர் குறித்த நபரும் தனக்கு தானே துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு உயிரிழந்துள்ளார்.
தபால் நிலைய கட்டிட குடியிருப்புத் தொகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் துப்பாக்கி ஒன்றுக்காக விண்ணப்பம் செய்திருந்தார் எனவும், அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவம் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குறித்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாக்கி உரிமம் பெற்ற துப்பாக்கி அல்ல என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.