சுவிட்சர்லாந்து வைத்தியசாலைகள் பாரியளவு நட்டத்தில் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2023ம் ஆண்டில் வைத்தியசாலைகள் அடைந்த மொத்த நட்டம் ஒரு பில்லியன் சுவிஸ் பிராங்குகள் என தெரிவிக்கப்படுகின்றது.
அநேகமான வைத்தியசாலைகள் இவ்வாறு நட்டமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
எனவே வைத்தியசாலைகளுக்கு அரசாங்கத்தின் நிதியீட்டம் கூடுதலாக தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சொற்ப அளவிலான வைத்தியசாலைகளினால் மட்டுமே லாபமீட்ட முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.