சுவிட்சர்லாந்தின் பேசல் விமான நிலையத்தில் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதைம வடிவிலான எரிபொருள் பயன்பாட்டை எதிர்த்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காலநிலை செயற்பாட்டாளர்களினால் பேசல் விமான நிலையத்தில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் செக் இன் செய்யும் பகுதியில் ஒரேஞ்ச் நிற பெயின்ட் ஊற்றப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முன்னணி காலநிலை செயற்பாட்டாளர் Max Voegtli என்பவரும் இந்த போராட்டத்தில் இணைந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதைம வடிவிலான எரிபொருள் பயன்பாடு மனிதத்தை குழி தோண்டி புதைப்பதற்கு நிகரானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.