பிரான்சில் பரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டித் தொடரில் சுவிட்சர்லாந்து முதல் பதக்கத்தை வென்றுள்ளது.
துப்பாக்கி சுடுதல் போட்டியில் சுவிட்சர்லாந்தின் Audrey Gogniat வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
10 மீட்டர் எயார் ரைபிள் போட்டி தொடரில் இவ்வாறு பதக்கம் வென்றுள்ளார்.
இந்தப் போட்டியில் தென் கொரியாவின் Hyojin Ban தங்கப்பதக்கத்தையும் சீனாவின் Yuting Huangவெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
குறித்த சுவிட்சர்லாந்து வீராங்கனை ஜுரா கண்டனை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் மார்ச் மாதம் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் Gogniat பதக்கம் ஒன்றை வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.