இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் காசா பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்களில் இதுவரையில் குறைந்தபட்சம் 39,363 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 90923 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் 7ம் திகதி முதல் காசாவில் இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காசாவின் சுகாதார அமைச்சு உயிர் இழப்பு விபரங்கள் பற்றி அறிக்கையிட்டுள்ளது.
நேற்றைய தினம் 39 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன் 93 பேர் காயமடைந்துள்ளனர்.
அண்மைய நாட்களாக இஸ்ரேலிய படையினர் தீவிர தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.