சுவிட்சர்லாந்தில் வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் முழுவதும் வெப்பநிலை அதிக அளவில் காணப்படும் என சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறிப்பாக ஜெனிவா பகுதியில் இவ்வாறு வெப்ப அலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
31 முதல் 35 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை நிலவும் என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் ஜெனிவாவில் அதிக அளவு வெப்பநிலை நீடிக்கும் என மத்திய காலநிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜெனிவா, வலாயிஸ், ரிக்கினோ மற்றும் கிராபன்டன் போன்ற கான்டன்களில் வெப்பநிலை அதிக அளவில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகளவு வெப்பநிலை நிலவும் நாட்களில் மக்கள் கூடுதல் அளவில் நீரை பருக வேண்டும் எனவும் நாளொன்றுக்கு 1.5 லீட்டர் தண்ணீர் பருக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்,நேரடியாக சூரிய ஒளி படுவதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் வயோதிபர்கள் மற்றும் செல்லப்பிராணிகளை வாகனங்களில் தனித்து விடக்கூடாது எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.