ஏடிஎம் இயந்திரங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில், ஏடிஎம் இயந்திரங்களை குற்றவாளிகள் அதிகளவில் இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெடிபொருட்கள், வாயு வகைகள் போன்ற பொருட்களை பயன்படுத்தி ஏ.டி.எம் இயந்திரங்கள் வெடிக்க செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக ஜூரா கான்டனில் அதிக அளவில் இவ்வாறு ஏ.டி.எம் இயந்திரங்கள் தாக்கப்படுவதாகவும், அவற்றின் பணம் கொள்ளை அடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரையில் 24 தடவைகள் ஏடிஎம் இயந்திரங்கள் தாக்கி கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டச்சு, மொராக்கோ, ரோமன், சேர்பியா போன்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் கயிறைக் கொண்டு கூட ஏடிஎம் இயந்திரங்களை பெயர்த்தெடுத்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.