சுவிஸ் விமான சேவை நிறுவனம் லெபனானின் தலைநகர் பெய்ரூட்டுக்கான விமான பயணங்களை இடைநிறுத்தம் செய்துள்ளது.
லுப்தான்சா குழும நிறுவனத்தின் ஏனைய விமான சேவை நிறுவனங்களைப் போன்று சுவிஸ் சர்வதேச விமான சேவை நிறுவனமும் பெய்ருட்டுக்கான விமான பயணங்களை இடைநிறுத்தி உள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி வரையில் இவ்வாறு விமான பயணங்கள் இடை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக லுப்தான்சா மற்றும் சுவிஸ் விமான சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அண்மையில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டு பகுதியான கோலன் ஹைட் பகுதியில் அமைந்துள்ள கால்பந்தாட்ட மைதானம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த தாக்குதலில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிராந்திய வலயத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக விமான சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் கிரேக்கம் உள்ளிட்ட ஏனைய பல நாடுகளின் விமான சேவை நிறுவனங்களும் விமான பயணங்களை இடை நிறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.