ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் ரணிலை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான மொட்டு கட்சி இன்றைய தினம் ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிடுவது என அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து ஒரு தொகுதி உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணிலை சந்தித்து தங்களது ஆதரவினை உறுதி செய்துள்ளனர்.
காஞ்சன விஜேசேகர, அஜித் ராஜபக்ச, திலும் அமுனுகம, எஸ்.பி. திஸாநாயக்க, பிரமித பண்டார தென்னக்கோன், மஹிந்தானந்த அலுத்கமகே கீதா குமாரசிங்க உள்ளிட்ட பலர் இவ்வாறு ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.
இதேவேளை, கட்சியின் தீர்மானத்திற்கு புறம்பாக வேறும் வேட்பாளர்களை ஆதரித்தால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என மொட்டு கட்சி எச்சரித்துள்ள பின்னணியில் முக்கியஸ்தர்கள் பலர் ரணிலுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.