மொட்டு கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் ஒருவரை நியமிக்க உள்ளதாக இன்றைய தினம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கசவின் இல்லத்தில் இன்றைய தினம் கட்சி உறுப்பினர்கள் கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
எவ்வாறெனினும், யாரை வேட்பாளராக நியமிப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை.
பொதுஜன முன்னணியின் நிறைவேற்றுக்குழுவைச் சேர்ந்த 82 பேரில் இன்றைய தினம் 79 பேர் பங்கேற்றிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தனியான வேட்பாளரை நியமிப்பது குறித்த யோசனைக்கு 11 பேர் மட்டுமே எதிர்ப்பை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மொட்டு கட்சி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், தற்பொழுது தனி வேட்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தீர்மானித்துள்ளது.
கட்சியின் தீர்மானத்திற்கு முரணாக செயற்படுவோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.