காசாவில் போலியோ தடுப்பூசி ஏற்றுவதற்கு போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளது.
காசா பரப்பில் போலியோ தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனினும் அதற்கு முன்னதாக அந்தப் பிராந்தியத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
காசா பிராந்தியத்தில் போலியோ வைரஸ் தாக்கம் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் கழிவுநீர் ஆய்வுக்கு உட்படுத்திய போது இவ்வாறு போலியோ நோயாளர்கள் தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது.
போலியோ வைரசினால் பாதிக்கப்பட்ட 70 வீதமானவர்களுக்கு நோய் அறிகுறி தென்படுவ தில்லை என தெரிவிக்கப்படுகிறது.
போலியோ தடுப்பூசி ஏற்றுவதற்கு உரிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
காசாவில் அண்மைய நாட்களாக இஸ்ரேல் படையினரின் தாக்குதல்கள் தீவிர படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் இந்த மோதல்கள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் காசா பரப்பில் தாக்குதல் காரணமாக சுமார் 40000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.