இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு அனர்த்தத்தினால் இதுவரையில் 108 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மண்சரிவில் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் இந்த பாரிய மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
கடுமையான மழை காரணமாக இவ்வாறு மண்சரிவு நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மண்சரிவில் சிக்கிய சுமார் ஆயிரம் பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிராமங்கள், பாலங்கள் உள்ளிட்டன பாரியளவில் அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தேயிலைத் தோட்டங்களை சுற்றியுள்ள கிராமங்களே இவ்வாறு மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வேறும் மாநிலங்களும் உதவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.