சுவிட்சர்லாந்தில் சட்டவிரோத ஆக்கடத்தல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் 197 பேர் சட்டவிரோத ஆக்கடத்தல் நடவடிக்கைகளுக்கு இலக்காகி உள்ளதாக தொண்டு நிறுவனமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையானது கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 11 வீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.
அதிக எண்ணிக்கையில் ஆண்கள் இவ்வாறு சட்ட விரோத ஆக்கடத்தல் நடவடிக்கைகளில் சிக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
மொத்தமாக 75.5 வீதமானவர்கள் இவ்வாறு சட்டவிரோத ஆற்றல் நடவடிக்கைகளில் சிக்குகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோத ஆட்கடத்தல் வலைகளில் அதிக அளவில் ஆப்பிரிக்க பிரஜைகள் சிக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் பிரவேசிப்போர் தண்டிக்கப்படுவதுடன் அவர்கள் நாடு கடத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.