சுவிட்சர்லாந்தில் கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கோடைகால கோவிட் தொற்று பரவி வருவதாகவும் மருந்தகங்களில் போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது பரவி வரும் கோவிட் திரிபானது ஆபத்தானது அல்ல என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், சிலர் இந்த புதிய திரிபிற்கு எதிராக தடுப்பூசி ஏற்றிக்கொள்ள விரும்புகின்றனர்.
அவ்வாறு தடுப்பூசி ஏற்றுக்கொள்ள விரும்புவோருக்கு பெற்றுக் கொள்ள போதிய அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
மருந்தகங்கள் மற்றும் மருத்துவர்கள் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் அரசாங்கம் கோவிட் தடுப்பூசிகளை வழங்கி வந்தது.
எனினும் தற்பொழுது கோவிட் தடுப்பூசிகளை மருந்தகங்கள் மற்றும் மருத்துவர்களிடம் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அவசர நோய் தொற்று அலை நிலமைகளின் போது பயன்படுத்த கூடிய வகையில் அரசாங்கம் கோவிட் தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்தி வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.