ஜனாதிபதி நாடாளுமன்றை கலைக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி திடீரென நாடாளுமன்றை கலைக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக உயர்மட்ட அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாடு காரணமாக இவ்வாறு நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் பூர்த்தியாகுவதற்கு முன்னதாக இரு தரப்பிற்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்படாவிட்டால் நாடாளுமன்றை கலைப்பது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்படுவதனால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எவ்வித இடையூறும் எற்படாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் ஏற்பாடு செய்ய முடியும் என்ற போதிலும், ஒரே திகதியில் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.