பிரித்தானியாவில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் மேலும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.
நடன பயிற்சி செயலமர்வு ஒன்றில் பங்கேற்றவர்கள் மீது இந்த கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த ஆறு பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் பிரித்தானியாவின் லாங்ஷெயாரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
என்ன காரணத்தினால் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
கத்தி குத்து தாக்குதலில் உயிரிழந்தவர்களது குடும்பங்களுக்கு பிரித்தானிய மன்னரும் பிரதமரும் தங்களது இரங்கல்களை வெளியிட்டுள்ளனர்.