ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.
இன்றைய தினம் ஜனாதிபதியை சந்தித்து இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆதரவினை வெளியிட்டுள்னர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இது தொடர்பிலான விசேட கூட்டம் நடைபெற்றுள்ளது.
மேலும் 6 உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.
குறிப்பாக நேற்றயை தினம் கட்சி வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதாக அறிவித்த நிலையில் இன்று தங்ளது ஆதரவினை ஜனாதிபதிக்கு வழங்குவதாக ஆளும் கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.