இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 163 ஆக உயர்வடைந்துள்ளது.
கேளரளாவின் வயநாட்டில் நேற்றைய தினம் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 மண்சரிவுகளில் சிக்கி இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
இதுவயைரில் மண்சரிவில் சிக்குண்ட 1,500 இற்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வயநாட்டில் தொடர்ந்தும் கனமழை பெய்து வருவதால் மேலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.