சுவிட்சர்லாந்து பங்குச் சந்தையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பங்குப் பரிவர்த்தனை நிறுவனமான Swiss stock exchange SIXல் இவ்வாறு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, ஏற்கனவே தொழில்நுட்பக் கோளாறினால் பாதிக்கப்பட்டு இன்று காலை சுவிஸ் பங்குச்சந்தை வழமைக்கு திரும்பியது.
தகவல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.
இன்று காலை முதல் இவ்வாறு பங்குச்சந்தை நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்னணியில் முற்பகல் 11:30 மணியளவில் பங்குச்சந்தை நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியதாக சுவிஸ் பங்குச்சந்தையான சிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்ன காரணத்தினால் இவ்வாறு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதுஎன்பது குறித்து ஆய்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் தொழில்நுட்ப கோளாறு உள்ளக தொழில்நுட்பக் கோளாறு எனவும் சைபர் தாக்குதல்கள் எதுவும் கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.