ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இன்றைய தினம் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இது தொடர்பில் அறிவித்துள்ளது.
கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.