உலகின் முதனிலை விமான உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான போயிங் நிறுவனம் தனது பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியில் மாற்றம் செய்யவுள்ளது.
புதிய பிரதம நிறைவேற்ற அதிகாரியாக ரொபர்ட் கெல்லி ஒர்ட்பெர்க் நியமிக்கப்படவுள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி முதல் ஒர்ட்பெர்க் பதவியை பொறுப்பேற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய பிரதம நிறைவேற்ற அதிகாரி டேவ் ச்சாவ்லொன் ஓய்வு பெற்றுக் கொள்ள உள்ளார்.
போயிங் நிறுவனம் பாரிய அளவு நட்டத்தை எதிர்நோக்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டு பகுதியில் போயிங் நிறுவனம் 1.4 பில்லியன் டாலர் செயற்பாட்டு நட்டத்தை பதிவு செய்துள்ளது.
போயிங் நிறுவன விமானங்களின் பாதுகாப்பு தொடர்பிலும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இவ்வாறான ஒரு பின்னணியில் போயிங் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போயிங் நிறுவனத்தில் சுமார் 170000 பணியாளர்கள் பணியாற்றிய வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில விமானங்கள் விபத்துக்குள்ளானமை தொடர்பில் போயிங் நிறுவனம் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நீதிமன்றம் போயிங் நிறுவனத்தின் மீது அபராதம் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிறுவனம் நட்டத்தை எதிர் நோக்குதல் மற்றும் நிறுவனத்தின் உற்பத்திகள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் போன்ற பல்வேறு சவால்களை புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி எதிர்நோக்குவார் என தெரிவிக்கப்படுகிறது.