ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரதானியான இஸ்மாயில் ஹனியா படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹனியா மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரானிய புரட்சி ராணுவம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
ஈரானிய புதிய ஜனாதிபதி மசூத் பிசாக்கியானின் பதவி பிரமாண நிகழ்வில் பங்கேற்பதற்காக ஹமாஸ் தலைவர் ஈரான் விஜயம் செய்திருந்தார்.
இவ்வாறான ஒரு பின்னணியில் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
62 வயதான ஹனியா 1980 களில் ஹமாஸ் இணைந்து கொண்டார் என தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிய தாக்குதலில் ஹனியா கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.