சுவிட்சர்லாந்தில் இன்றைய தினம் தேசிய தின கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.
சுவிட்சர்லாந்தில் இன்று தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து என்ற நாடு உருவாக்கப்பட்ட தினமாக ஆகஸ்ட் முதலாம் திகதி கருதப்படுகின்றது.
ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தேசிய தினம் கொண்டாடப்பட வேண்டும் என்பது குறித்து 1891 ஆம் ஆண்டு தீர்மானம் எடுக்கப்பட்டது.
1899 ஆம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்தில் தேசிய தின கொண்டாட்டங்கள் வருடாந்தம் நடைபெறுகின்றது.
சுவிட்சர்லாந்து என்ற நாடு உருவாக்கப்படும் முன்னதாக ஹால்விட்டா என்ற பெயரில் இந்த நாடு இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹால்விட்டா உருவாக்கப்பட்டு 600 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இந்த தீர்மானத்தை எடுத்திருந்தது.
மிக நீண்ட காலமாக சுவிட்சர்லாந்தில் தேசிய விடுமுறை தினம் ஒன்று அனுஷ்டிக்கப்படவில்லை.
ஆகஸ்ட் முதலாம் திகதியான, தேசிய தினம் அன்று நாடு முழுவதும் பல்வேறு விழாக்கள் நிகழ்வுகள் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.
வானவேடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தின் மிகவும் பழமையான அரசியல் அமைப்பு 1291ம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகின்றது.