சுவிட்சர்லாந்தில் இடம் பெற்ற தீ விபத்து சம்பவம் ஒன்றில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
வீடு ஒன்றில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
மொன்றியக்ஸ் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டின் அறை ஒன்றில் சலனமற்றிருந்த பெண்ணை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர்.
எவ்வாறு எனினும் குறித்த பெண் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
இந்த தீ விபத்து சம்பவத்தில் உயிரிழந்த பெண் யார் என்பது குறித்த ஆள் அடையாள விபரங்களை இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.