சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் நான்கு கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 45 வயதான சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிறிஸ்டல் மெத் எனப்படும் போதைப்பொருள் வகையே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சைக்கிளில் பயணித்த ஒருவரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து இவ்வாறு போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடமிருந்து ஹெரோயின் உள்ளிட்ட மேலும் சில போதைப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதுடன், 12000 சுவிஸ் பிராங்க் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.