லெபனானிலிருந்து சுவிட்சர்லாந்து பிரஜைகளை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பான முறையில் சுவிட்சர்லாந்து பிரஜைகள் லெபனானை விட்டு வெளியேறுவது பொருத்தமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
காசா பிராந்தியத்தில் பதற்றம் நிலவி வருவதனால் லெபனானுக்கான பயணங்கள் உசிதமானதல்ல என சுவிஸ் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஹமாஸ் இயக்கத்தின் அரசியல்துறை தலைவர் இஸ்மாயில் ஹனியா ஈரானில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இஸ்ரேலிய இராணுவம் இந்த தாக்குதல்களை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தப் பிரச்சினை காரணமாக காசா பிராந்திய வலயத்தில் பெரும் போர் பதற்றம் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.