சுவிட்சர்லாந்து விமான சேவை நிறுவனம் இஸ்ரேலுக்கான விமானப் பயணங்களை இடைநிறுத்தியுள்ளது.
சூரிச் மற்றும் தெல் அவீவ் நகரங்களுக்கு இடையிலான விமானப் பயணம் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே சூரிச் மற்றும் லெபனானின் பெய்ரூட் நகருக்கான விமானப் பயணங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டெல் அவீவிற்கான விமானப் பயணங்கள் எதிர்வரும் 8ம் திகதி வியாழக்கிழமை வரையில் இடைநிறுத்தப்படுவதாக சுவிஸ் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என சுவிஸ் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.