ஈவீசா வழங்குவது குறித்த பணிகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் அமைச்சரவை தீர்மானத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் இந்த இடைக்கால தடை உத்தரவினை விதித்துள்ளது.
இந்த இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுடனும் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை அமுலாவதனை ரத்து செய்யும் வகையிலும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நாடாளுமன்ற உறப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சம்பிக்க ரணவக்க மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இந்த மனுவை நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான ஈ வீசா வழங்கும் பணிகளை வெளிநாட்டு நிறுவனங்களிடம் அரசாங்கம் ஒப்படைத்திருந்தது.
வீ.எப்.எஸ் க்ளோபல் உள்ளிட்ட இரண்டு நிறுவனங்களிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
எனினும் இந்த நிறுவனங்கள் பாரியளவில் கட்டணம் அறவீடு செய்வதாகவும் இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த வீசா திட்டத்தினால் பாரியளவு மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.