உலகின் மிகப் பெரிய சுவிட்சர்லாந்து தேசிய கொடி நேற்றைய தினம் காட்சிப்படுத்தப்பட்டது.
சான்டிஸ் மலைப் பகுதியில் இந்த பாரிய தேசியக் கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய தினத்தை முன்னிட்டு இவ்வாறு தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய மலைகளில் ஒன்றான சான்டிஸில் தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
80 மீற்றர் அகலமும் 80 மீற்றர் நீளமும் கொண்ட பாரிய கொடியொன்று இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு ஜுலை மாதம் 31ம் திகதி தொடக்கம் இந்த பாரிய தேசிய கொடி காட்சிப்படுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது.
கடந்த ஆண்டு சீரற்ற காலநிலை காரணமாக தேசிய கொடி காட்சிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.